2025 ஜூலை 09, புதன்கிழமை

'ரணில் விலகினால் சஜித் தலைவராக வேண்டும்'

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து, ரணில் விக்கிரமசிங்க விலகுவாராயின், சஜித் பிரேமதாச கட்சியின் தலைவராக வேண்டுமென ஐக்கிய ​தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிப்பதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க 24 வருடங்கள் கட்சியின் தலைவராக இருப்பதாகத் தெரிவித்த அவர், மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்பதாகவும், வெற்றிப் பெற வேண்டுமாயின் மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .