2026 ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை

ரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; உயிர் தப்பிய பெண்

Janu   / 2026 ஜனவரி 27 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா தாண்டிக்குளம் தண்டவாளத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் வவுனியா தாண்டிக்குளம் ரயில் கடவையில் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியுள்ளது.   

விபத்தில் கிடாச்சூரி சாஸ்திரிகூழாங்குளத்தை சேர்ந்த அல்பிரட் ஜெயராஜ் திலகவதி (வயது - 52) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X