2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் மரணம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதி நேற்று (14) இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு-பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23வது தூண்  அருகே இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்து குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .