2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ரயிலுடன் மோதுண்டு யானைகள் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பன்பொல மற்றும் பலுகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து ரயிலுடன் மோதுண்டு இரு யானைகள் உயிரிழந்துள்ளன.

நேற்று (20) கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணம் செய்த, ரயிலில் இரு யானைகள் மோதிய நிலையில், ஒரு யானை சம்பவ இடத்தில் பலியானதுடன், மற்றைய யானை பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணம் செய்த “மீனகயா” என்ற ரயிலில் , பலுகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து யானையொன்று  ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்​டின் பத்து மாத காலப்பகுதியில் இதுவரையில்  பத்து காட்டு யானைகள் ரயிலுடன்மோதுண்டு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .