Freelancer / 2024 நவம்பர் 18 , பி.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலில் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாமல் ராஜபக்ஷ மற்றும் தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவு செய்யபட்டு அவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்ட விடயம் கட்சி தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் தெரியாது என்றும் அது கட்சியின் செயலாளர் தன்னிச்சையாக எடுத்த தீர்மானம் எனவும் கட்சிக்குள் குழப்பநிலை ஏற்பட்டு, நாளை கட்சி உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. R
16 minute ago
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
3 hours ago