2026 ஜனவரி 14, புதன்கிழமை

ராஜபக்‌ஷகளின் வரலாற்று பட்​ஜெட்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 12 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முழு உலகமே தொற்று நோயால் பாரிய பின்னடைவைc சந்தித்துள்ள இவ்வேளையில், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்று, நிதியமைச்சராக கடமையேற்று, தனது கடமையை நிதியமைச்சர் பெஷில் ராஜபக்‌ஷ நிறைவேற்றவுள்ளார் எனத் தெரிவித்த வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்னாயக்க, ராஜபக்‌ஷர்களின் வரலாற்று பட்ஜெட் இன்று (12) சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு நாட்டைக் கைப்பற்றி, 6 ட்ரில்லியன் ரூபாயை சீனாவிடமிருந்து கடனாகப் பெற்று, துறைமுகத்தை சீனாவுக்கு விற்று திறைசேறியில் இருந்த பணத்தை தன்னிச்சையாக கொள்ளையடித்தது. இதனால், நாடு பொருளாதார ரீதியில் சீரழிந்துவிட்டாது.

 வெறுமையான திறைசேறியை நாம் பொறுப்பேற்ற போதுதான், இந்த பேரழிவு ஏற்பட்டது.

உயிரை பணயம் வைத்து, பருத்தித்துறை தொடக்கம் தெய்வேந்திரமுனை வரை அனைத்து ஆசிரியர்கைளையும் கொழும்புக்கு அழைத்து வந்து, மக்களின் உயிர்களை அடகு வைத்து அவர்களின் குணாதிசியங்களை உயர்த்தி காட்ட எடுத்த நடவடிக்கையை அனைவரும் பார்த்திருப்பார்கள். இதுதான் ஸ்டாலினின் விருப்பம். எனவே இதற்கு இனிமேலும் ஏமாற வேண்டாம் என்றார்.

ஆகவே, இந்தப் பிரச்சினைகளை இந்தப் பூமியில் உண்மையான மக்கள் அன்பைப் பெற்ற தொழிலாளர் தலைவரால் மாத்திரமே தீர்க்க முடிந்தது. மஹிந்த ராஜபக்‌ஷவே எப்போதும் போராட்டங்களுக்கு தீர்வை வழங்கியுள்ளார். எனவே இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் வரவு -செலவுத்திட்டம் ஊடாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, நிதியமைச்சர் இன்று முன்வைக்கும் வரவு- செலவுத்திட்டம் மக்கள் வரவு-செலவுத்திட்டமாக அமையும் என நம்புவதாகத் தெரிவித்த அவர், சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் கட்சி பேதமின்றி பிரதேச தலைவர்களுக்கு கிராமங்களை கட்டியெழுப்புவதற்காக  30 இலட்சம் ரூபாய்   வழங்கப்படவுள்ளது என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .