2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

ரூ.1.28 மில்லியன் கொவிட் நிதியத்துக்கு நன்கொடை

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் நிதியத்துக்காக 1.28 மில்லியன் ரூபாய் நன்கொடையை, இலங்கை பல்கலைக்கழக எழுதுவினைஞர், முகாமைத்துவ உதவியாளர், தொழிற்துறை சேவைகள் சங்கம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (29) வழங்கியது.

இந்நாட்டு கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக திரட்டப்பட்ட நிதியை, இலங்கை பல்கலைக்கழக எழுதுவினைஞர், முகாமைத்துவ உதவியாளர், தொழிற்துறை சேவைகள் சங்க பிரதிநிதிகள் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்துக் கையளித்தனர். 

இந்நிதி, மேற்படி சங்கங்களின் பிரதான தலைவர் தம்மிக எஸ் பிரியந்தவால் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. 

இதன்போது, அமைச்சர் காமினி லொகுகே, தலைமை செயலாளர் எஸ்.ஜே.நல்லகே, தலைமை பொருளாளர் லக்ஷ்மன் அதிகாரி உள்ளிட்ட பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .