2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரூ. 25,000 அபராதம் விரைவில் அமுல்

Gavitha   / 2017 ஜனவரி 03 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு எதிராக, இவ்வாண்டு வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட 25,000 ரூபாய் அபராத யோசனையை, விரைவில் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

இந்தத் அபராதத் தொகை தொடர்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தராதரம் பார்க்காது அபராதம் விதிக்கும் நடைமுறை அமுல்படுத்தப்படும், என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய ஆண்டுக்கான கடமைகளை, பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஆரம்பித்த பொலிஸ்மா அதிபர், ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், “இந்த அபராதத் தொகை விதிப்பு, காலத்தின் கட்டாயமாகும். தவறிழைப்பவர்களுக்கு, இந்த அபராதத் தொகை விதிக்கப்படுவதோடு, சட்டத்தையும் போக்குவரத்து விதிமுறைகளையும் மதித்துச் செயற்படுபவர்கள், இதன்மூலம் இலாபமடைவர்” என்றும் கூறினார்.  

“சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த, அனைத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, அவர் மேலும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .