Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 19 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் லசந்த விக்கரமதுங்க படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிசை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி திஸ்ஸ சிறி சுகதபால ஆகிய இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜூலை 03 ஆம் திகதிவரையில் குறித்த இரண்டு சந்தேகநபர்களின் விளக்கமறியலையும் கல்கிசை நீதிமன்றின் பிரதான நீதவான் மொஹ்மட் மிஹாயில் இன்று நீடித்து உத்தரவிட்டார்.
முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரசன்ன நாணயக்காரவிடம் சிறைச்சாலையில் வைத்து வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்ய வேண்டுமென குற்றவியல் விசாரணைத் திணைக்களம் விடுத்திருந்த கோரிக்கை்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மேலும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவிடம் எதிர்வரும் 22 ஆம் திகதி குற்றவியல் விசாரணைத் திணைக்களம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் இன்று நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
4 hours ago
6 hours ago