2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

விசேட அறிவிப்பை விடுத்தது ரயில்வே

Mayu   / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆகஸ்ட் (01) முதல் ஒன்லைன் முறையின் மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரம் திருத்தப்படவிருந்த நிலையில், அது மேற்கொள்ளப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒன்லைன் முறை மூலம் தினமும் இரவு 7.00 மணிக்கு ஆசன ஒதுக்கீடு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதனை, திருத்தம் செய்து காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும், கணினி அமைப்பின் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அதனை முன்னர் இருந்த நேரத்திற்கே மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துணை முகாமையாளர் எம்.என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .