2021 மே 14, வெள்ளிக்கிழமை

விசித்திரமாக கற்பித்த ஆங்கில ஆசிரியர் கைது

Editorial   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை தெலிஜ்ஜவில பிரதேசத்திலத்தில் பிரசித்தமான பாடசாலையொன்றின் அறைக்குள், 14 வயதான மாணவியின் உடலை தொட்டு, அம்மாணவிக்கு முத்தம் கொடுப்பதற்கு முயற்சித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஆங்கில பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலிம்பட பொலிஸாரே அவ்வாசிரியரை கைது செய்துள்ளனர்.

அறையொன்றில் இருக்கும் புத்தகத்தை எடுத்துவருமாறு அவ்வாசிரியர், மாணவிக்கு பணித்துள்ளார். மாணவியும் புத்தகத்தை எடுப்பதற்காக, அவ்வறைக்குச் சென்றுள்ளார். எனினும், மாணவியின் பின்னாலேயே சென்ற அவ்வாசிரியர், மாணவியை கட்டிப்பிடித்து, இவ்வாறு துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

எனினும், அவருடைய பிடிக்குள் சிக்கிக்கொள்ளாது, தப்பியோடிய மாணவி, தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .