Editorial / 2026 ஏப்ரல் 26 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து, அனைவரும் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (த.வெ.க) கட்சிக்கு எதிராகப் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது, கட்சியின் நிறங்கள் பூசப்பட்ட உயிருள்ள புறாக்கள் பறக்கவிடப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் புகழ்பெற்ற விலங்கு நல அமைப்பான 'பீட்டா' அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நேரடியாகக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. உயிருள்ள பறவைகள் மீது செயற்கை இரசாயனச் சாயங்களைப் பூசுவது கடும் கண்டனத்திற்குரியது என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"புறாக்கள் மீது சாயம் பூசுவது அவற்றின் இறக்கைகள் மற்றும் தோலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், அவற்றின் உயிருக்கே ஆபத்தாக முடியும். இச்செயல் விலங்கு சித்திரவதை சட்டத்தின் கீழ் வரும் தண்டனைக்குரிய குற்றமாகும்."
எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறும், இது குறித்துத் தனது கட்சித் தொண்டர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் விஜய்க்குப் பீட்டா அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago