Editorial / 2026 மார்ச் 29 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் திருடப்பட்ட 14 பவுண் தங்க நகைகளை, யாழ். குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் அதிரடியாக மீட்டுள்ளனர்.
யாழ். நகரப் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் இருவரும் அரச/தனியார் பணி நிமித்தம் பகல் நேரங்களில் வெளியில் சென்றுவிடுவர். இதனால் வீட்டைப் பராமரிப்பதற்கும் வீட்டு வேலைகளுக்குமாக 53 வயதுடைய பெண் ஒருவரை ஊதிய அடிப்படையில் பணியில் அமர்த்தியிருந்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த 14 பவுண் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதை அவதானித்த உரிமையாளர்கள், இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து துரித விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அந்த வீட்டுப் பணிப்பெண்ணைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட 14 பவுண் நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.





அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .