Freelancer / 2025 மே 20 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், நீர்வேலியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஊரெழு கிழக்கு சுன்ணாகத்தைச் சேர்ந்த செல்வராஜா அனிற்றன் (வயது 29) என்ற இளைஞராவார்.
கடந்த 11 ஆம் திகதி குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னிருக்கையில் இருந்து கொண்டு பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியால் சென்ற போது நீர்வேலிப் பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மூவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மேற்படி இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார். சாட்சிகளை கோப்பாய் பொலிசார் நெறிப்படுத்தினர். (a)
10 minute ago
22 minute ago
27 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
27 minute ago
35 minute ago