2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வயோதிபரின் கழுத்தை பதம்பார்த்த இரும்புக் கம்பி

Gavitha   / 2017 ஜனவரி 01 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயோதிபர் ஒருவரின் கழுத்தை பதம்பார்த்த இரும்புக் கம்பியை,  வைத்தியர்கள் மிகுந்த போராட்டத்தின் மத்தியில் அகற்றப்பட்டச் சம்பவம், கேகாலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

வயோதிபர் ஒருவர், கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வரும் கட்டடமொன்றில் வழுக்கி விழுந்துள்ளார். இதன்போது, நீண்ட இரும்புக் கம்பியொன்று அவரது கழுத்தில் குத்தி, கண்ணத்தின் வழியாக வெளியே வந்துள்ளது.

இதனை அவதானித்த ஏனைய பணியாளர்கள்,  வெளியில் நீட்டிக்கொண்டிருந்த இரும்புக் கம்பியை மட்டும் அறுத்து எடுத்துள்ளதுடன், வயோதிபரை உடனடியாக  கேகாலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது, இரும்புக் கம்பியின் ஒரு பகுதி அவரது கழுத்தில் இருந்துள்ளது. இந்நிலையில், வைத்தியர் குழுவொன்று 3 மணித்தியாலங்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையின் பயனாக, வயோதிபரின் கழுத்திலிருந்த இரும்புக் கம்பி அகற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கேகாளை உதுமகமவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பியசேன என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .