2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

வரிகள் தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்

Freelancer   / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரிகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் தொழிற்சங்க  பணிப்பாளர் சமன் ரத்னப்பிரியவிற்கும் இடையில்  நிதியமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

கலந்துரையாடலின் மூலம் விரைவான தீர்வுகள், முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதாகவும் வரி தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரிடம் விரைவான குறுகிய கால தீர்வு யோசனை முன்வைக்கப்படும் எனவும் சமன் ரத்னப்பிரிய கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், புதிய வரி விதிப்பு தொடர்பில் தொழிற்சங்கத்தினர் ,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துகள், ஆலோசனைகளை கருத்திற்கொண்டு ஓரளவு நிவாரணம் வழங்குவதற்கான குறுகிய கால உத்திகள் குறித்து கலந்துரையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நிதிக்கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க கூறியுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X