Princiya Dixci / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரட்சிக்கு முகங்கொடுக்கும் திட்டத்தைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது என்று, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
வருடத்தின் முதல் காலாண்டுக்குள் ஏற்படபோகும் வரட்சிக்கு முகங்கொடுப்பதற்கு, ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம், கடந்த 20ஆம் திகதியன்று நடவடிக்கை எடுத்திருந்தது. அதன்பிரகாரம், திட்டத்தைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை உப-குழுக்கள் இரண்டும் நிறுவப்பட்டுள்ளன.
அவ்விரு குழுக்களும், தங்களுடைய யோசனைகளையும் பரிந்துரைகளையும், எதிர்வரும் 3ஆம் திகதியன்று கையளிக்கவுள்ளன என்று, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழேயே, இந்த விசேட செயலணி வழிநடத்தப்படவுள்ளது.
கடுமையான வரட்சி ஏற்படுமாயின், நீர் மின்விநியோகத்தை தொடர்ச்சியாக விநியோகம் செய்தல், சுத்தமான குடிநீரை விநியோகம் செய்தல், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரை விநியோகம் செய்தல் தொடர்பில், நடவடிக்கை எடுக்குமாறு உரிய அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
13 minute ago
16 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
1 hours ago
1 hours ago