2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தெஹிவளை துப்பாக்கித்தாரி கைது

Editorial   / 2025 டிசெம்பர் 18 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளையில் உள்ள ‘குவார்ட்ஸ் விளையாட்டு மைதானம்’ அருகே கடந்த 6 ஆம் திகதி ஒருவரைக் கொன்று மற்றொருவரை காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டதாக ​பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் களுபோவில, வனரத்தன வீதியைச் சேர்ந்த (52) வயதானவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலும் விசாரித்தபோது, ​​கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 16 போரா துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் பெல்லன்வில பூங்கா அருகே புதைக்கப்பட்டிருந்ததாக  பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X