Editorial / 2026 மே 07 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில், பொது இடத்தில் வீரவாளால் கேக் வெட்டிப் பிறந்தநாளைக் கொண்டாடிய தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) எம்.எல்.ஏ. மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றது. இதில் சென்னை ராயபுரம் தொகுதியில் வெற்றி வாகை சூடிய த.வெ.க. வேட்பாளர் விஜய் தாமுவுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாளாகும்.
தேர்தல் வெற்றி மற்றும் பிறந்தநாள் என இரண்டையும் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவர் கேக் வெட்டிக் கொண்டாடினார். இதன்போது அவரது ஆதரவாளர்கள், சுமார் 2 அடி நீளமுள்ள வீரவாள் ஒன்றை அவருக்குப் பரிசாக வழங்கினர். அந்த வாளைப் பெற்றுக்கொண்ட விஜய் தாமு, அதனை வானத்தை நோக்கி உயர்த்திப் பிடித்ததுடன், அதே வாளைக் கொண்டு பிறந்தநாள் கேக்கை வெட்டினார்.
ஏற்கனவே ரவுடிகள் மற்றும் சமூக வலைதள மோகம் கொண்ட இளைஞர்கள் இதுபோன்று வாளால் கேக் வெட்டும் வீடியோக்கள் பரவி வந்ததையடுத்து, பயங்கர ஆயுதங்களை வைத்து கேக் வெட்டினால் சிறை தண்டனை உறுதி எனப் போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இத்தகைய சூழலில், தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டே நாட்களில் ஒரு மக்கள் பிரதிநிதியின் இச்செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் வீரவாளால் கேக் வெட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ராயபுரம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. விஜய் தாமுவை கைது செய்யக் கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் டி.ஜி.பி. அலுவலகங்களுக்கு இணையதளம் (Online) வாயிலாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago