Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 03 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா, கனகராயன்குளம் ஏ-9 வீதியில் இன்று(03) காலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் மரணமடைந்துள்ளனர்.
மட்டகளப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு மற்றுமொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இதன்போதுகாலை.5:30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் அரசடி வீதி நல்லூரை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜெயமூர்த்தி திசிகாந்தன், பளை வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிசான் யனுஸ்டன் ஆகிய இருவரும் மரணமடைந்துள்ளனர்.
சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .