Nirosh / 2021 நவம்பர் 14 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
வென்னப்புவ, லுணுவில, ரோஸ் மரியவத்தையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 74 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவரின் 9 வயது பேரனும், மருமகனும் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரத்தில் இருந்து வென்னப்புவ, லுணுவில பகுதியை நோக்கி மூவர் பயணித்த வேன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த வேன் வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
4 hours ago