J.A. George / 2024 பெப்ரவரி 19 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வெளிநாட்டு தம்பதியரை ஏற்றிச் சென்ற கார், கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோத விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
அதில், வெளிநாட்டு தம்பதி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தாலிய தம்பதி (76-78) மற்றும் அநுராதபுரம் பந்துலகமைச் சேர்ந்த 42 வயதான சாரதி ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
வெளிநாட்டுக் கணவனும் மனைவியும் நேற்று இரவு 09 மணியளவில் தமது பயணத்தை முடித்துக் கொண்டு இத்தாலி செல்வதற்காக காரில் ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
16 Mar 2026
16 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Mar 2026
16 Mar 2026