S. Shivany / 2021 மார்ச் 14 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களம் துரித விசாரணை மேற்கொண்டதைபோன்று, விமல் வீரவன்சவுக்கு எதிராக தான் செய்துள்ள முறைப்பாடு குறித்தும் விசாரணை நடத்தப்படுமென தான் நம்புவதாக, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டரில் பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தான் நேரடி தொடர்புபட்டிருப்பதாகவும் அதற்கான சாட்சி தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்து, விமல் வீரவன்ச தன்மீது குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். எனினும், தன் மீதான குற்றச்சாட்டு பொய் என நிரூபனமாகியுள்ளது என, ரிஷாட் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago