2021 மே 18, செவ்வாய்க்கிழமை

விமலுக்கு பதிலுரைத்த ஜனாதிபதி கோட்டா

S. Shivany   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின தலைமை பொறுப்புக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டுமென, ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆளும் தரப்பு உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு, ஜனாதிபதி அவர்களுக்கு அறிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவை ஜனாதிபதி சந்தித்து பேசியபோதே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தான் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட   ஒருவர் எனவும் எனவே, வேறு அமைப்புகளுக்கோ அல்லது பதவிகளுக்கோ தலைமை தாங்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .