Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2022 மார்ச் 06 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு புதிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவ்விரு கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அண்மையில் கூடிய கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்திலேயே இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இன்னும் சில கட்சிகளை இணைந்துகொண்டு முழுமையான கூட்டமைப்பை உருவாக்குவதற்கே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் திட்டம் வகுத்துள்ளது.
அதனடிப்படையில் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதக கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதற்கும் கலந்துரையாடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
29 Apr 2025
29 Apr 2025