Editorial / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹப்புத்தளை – அக்கரசீய பிரதேசத்தில் கஜமுத்து நான்கும், வனவிலங்குகள் சிலவற்றின் எலும்புக்கூடுகளையும் உடன் வைத்திருந்த குற்றசாட்டின் பேரில், சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டு ஹப்புத்தளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் குறித்த பகுதியைச் சேர்ந்தவர்களென்பதுடன், விற்பனை செய்வதற்காகவே அவற்றை வைத்திருந்ததாகவும் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
ஹப்புத்தலை தங்கமலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து, அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள், சந்தேகநபர்களை இன்று (08) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
15 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
3 hours ago