R.Tharaniya / 2025 நவம்பர் 10 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
ஏறாவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் 2040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்த போது வாயில் விழுங்கிய 28 பக்கற் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்க வைத்து மீட்டெடுத்த சம்பவம் சனிக்கிழமை (8) அன்று இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது
ஏறாவூர் றகுமானியா வீதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரை சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (7) அன்று இரவு கைது செய்யப் பட்டு சனிக்கிழமை (8) அன்று எறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அன்றைய தினம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்
சிறைச்சாலைக்கு கொண்டு சென்ற குறித்த நபர் சிறைச்சாலை அதிகாரியிடம் தன்னை கைது செய்யும் போது தன் வசம் இருந்த 28 சிறிய பக்கற்றுக்கள் கொண்ட ஹெரோயினை வாயில் போட்டு விழுங்கி உள்ளதாகவும் இது தொடர்பாக பொலிஸாரிடமே எவரிடமும் தெரிவிக்க வில்லை என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபரை சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்க செய்த போது மலத்துடன் வாயில் போட்டு விழுங்கிய 28 பக்கற்றுக்கள் கொண்ட 1960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டனர்.
இதில் சிறையில் அடைக்கப்பட்ட 45 வயதுடைய அவர் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் இவரை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது மீண்டும் இந்த வழக்கிற்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூரில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago