Freelancer / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை, எகொட உயன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி மீது இன்று (04) ஆயுதமேந்திய குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
களுத்துறை, நாகொட, வெனிவெல்கொட பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வாள்கள் மற்றும் தடிகளுடன் ஆயுதமேந்திய பத்து பேர் கொண்ட குழு அந்தப் பொலிஸ் அதிகாரியைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததால் ஆத்திரமடைந்த குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது. R
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago