Janu / 2026 மே 04 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான ‘IN-SLN DIVEX 2026’ கூட்டுச் சுழியோடிப் (Diving Exercise) பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்திய கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவு கப்பலான ‘INS NIREEKSHAK’ கடந்த 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படைச் சுழியோடிகளும் இந்தியக் கப்பலின் மாலுமிகளும் இணைந்து ஏப்ரல் 21 முதல் 28 ஆம் திகதி வரை கொழும்பு கடற்பரப்பில் விசேட சுழியோடிப் பயிற்சிகளை முன்னெடுத்தனர்.
‘Saturation Diving’ போன்ற நீண்ட நேர ஆழ்கடல் சுழியோடி செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்ட இந்தக் கப்பலின் குழுவினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, ‘Nitrox’ வாயு கலவையைப் பயன்படுத்தும் (Mixed Gas Diving) நுட்பங்கள் குறித்து இரு நாடுகளின் சுழியோடிகளுக்கும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்த பயிற்சியானது நவீன சுழியோடி உபகரணங்களைக் கையாளுதல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பாக இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே அறிவையும் அனுபவத்தையும் பரிமாறிக்கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது.








56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago