Editorial / 2026 மார்ச் 31 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில், அதிகாரிகளின் அசமந்தப் போக்கைச் சுட்டிக்காட்டும் வகையில் வீதியின் நடுவே 'செயற்கை மரம்' ஒன்று முளைத்துள்ள வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
மருதமுனை கலாசார நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பிரதான வீதியில், வடிகான் மூடி ஒன்று நீண்டகாலமாகச் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணிக்கும் இந்த வீதியின் நடுவே ஏற்பட்டுள்ள பாரிய குழியினால் பாதசாரிகளும் வாகன சாரதிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.
விபத்து அபாயம்:
குறித்த வீதியில் இரவு வேளைகளில் மின்விளக்குகள் சரியாக ஒளிராததால், இருள் சூழ்ந்த நிலையில் இந்த குழியில் விழுந்து அடிக்கடி விபத்துக்கள் சம்பவிப்பதாகப் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மக்களின் கோரிக்கை:
இந்த ஆபத்தான நிலையை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், சமூக ஆர்வலர்களால் அந்தப் பள்ளத்தினுள் ஒரு செயற்கை மரம் நடப்பட்டுள்ளது. விபத்துக்களைத் தவிர்க்கவும், அதிகாரிகளுக்குத் தார்மீக அழுத்தம் கொடுக்கவும் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தச் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 minute ago
25 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
36 minute ago