S. Shivany / 2020 நவம்பர் 29 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்ளை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்துவரும் விசேட வேலைத்திட்டத்துக்கமைய, தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று, நாடு திரும்ப முடியாமல் இருந்த மேலும் 488 இலங்கையர்கள், இன்று(29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய, டுபாய் சென்றிருந்த 78 பேரும், மாலைத்தீவு சென்றிருந்த 69 பேரும், கட்டார் சென்றிருந்த 45 பேரும், அவுஸ்திரேலியா சென்றிருந்த 04 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
நாட்டை வந்தடைந்த அனைவருக்கும், தனியார் மருத்துவ மனைகள் ஊடாக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தொழிலுக்காகச் சென்று, அங்கு பல இன்னல்களுக்கு முகம்கொடுத்திருந்த 292 இலங்கையர்களும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
5 minute ago
20 minute ago
26 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
26 minute ago
28 minute ago