Janu / 2026 ஜனவரி 29 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 45 இலட்சம் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற ஒருவர் வியாழக்கிழமை (29) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், கல்பிட்டியைச் சேர்ந்த 43 வயதுடைய மீனவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வியாழக்கிழமை (29) அன்று Gulf Air விமானம் G.9-587 மூலம் ஷார்ஜாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
சந்தேக நபர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் இருந்து 30,000 வெளிநாட்டுத் தயாரிப்பு "மான்செஸ்டர்" மற்றும் "பிளாட்டினம்" வகை சிகரெட்டுகள் அடங்கிய 150 அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 5ஆம் திகதி சந்தேக நபர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
டி.கே.ஜி.கபில

13 minute ago
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
1 hours ago