Freelancer / 2021 நவம்பர் 10 , பி.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற வானிநிலையினால் குளியாப்பிட்டிய விலபொல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை மற்றும் மகனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
38 வயதான தந்தையின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டதுடன் மகனின் சடலம், இன்று (10) கண்டெடுக்கப்பட்டது.
குளியாப்பிட்டிய, விலபொல பிரதேசத்தில் தனது மகனை (11 வயது) மகனை பிரத்தியேக வகுப்புக்கு நேற்று (09) அழைத்துச் சென்று விட்டு வீடு திரும்பும் போதே இருவரும் இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மாதம்பே மத்திய கல்லூரியில் கல்வி கற்ற சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
குளியாப்பிட்டிய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கிராம மக்களின் உதவியுடன் சடலங்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
43 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
4 hours ago