Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2024 ஜூன் 13 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளவத்தை கரையோர வீதியில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிந்தவூர் ஆலிம் வீதியைச் சேர்ந்த பி.எல்.இலானி என்ற 29 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளையில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கிச் சென்ற வேன், முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்வதற்காக எதிர்த் திசையில் சென்ற மோட்டார் சைக்கிளுடன் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கரையோர வீதியின் நடுவே, பெரும்பாலான சாரதிகள் தமது வாகனங்களை எதிர்திசையில் செலுத்துவதை அவதானிக்காமல் செல்வதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago