2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வாகனங்களுக்கு 90% குத்தகை வரி

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனங்களுக்காக 90 சதவீதம்  வரை குத்தகை வசதிகளை வழங்குவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான அறிவுறுத்தல் மக்கள் வங்கியூடாக அரச மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் பெறுமதிக்கு ஏற்ப 100 சதவீதம் குத்தகை வசதிகள் கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 70 சதவீதமாக இலங்கை மத்திய வங்கியினால் மட்டுப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும் இந்த நடவடிக்கையினால் சந்தைகளில் காணப்படும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு வாகனங்களின் பெறுமதிகளுக்கு ஏற்ப 90 சதவீதம் குத்தகை வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X