2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கே கணவன் வருவதில்லை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகச் சமூகமளிக்குமாறு, சேவையின் முன்னாள் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர், பல வருடங்களாக வீட்டுக்கு வருவதில்லை என்றும், அவருக்கான நோட்டீஸை தன்னால் பொறுப்பேற்க முடியாது என்றும் அவரது மனைவி, ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரான நிஷாந்த விக்கிரமசிங்க, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

நாளை 30ஆம் திகதியன்று வருகைதருமாறே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

'எனக்கும், எனது கணவருக்கும் இடையில் தொடர்பே இல்லை, அவர் வீட்டுக்கு பல வருடங்களாக வரவில்லை. அவர் வசிக்கும் வீட்டின் விலாசம் தெரியாது' என்றும் அவரது மனைவி தெரிவித்ததாக அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X