2025 மே 19, திங்கட்கிழமை

வெளிநாடு செல்ல அனுமதி தருமாறு சஜின் கோரிக்கை

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன,  வைத்திய சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் செல்வதற்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது கோரிக்கை தொடர்பில், இன்று செவ்வாய்க்கிழமை (20) பரிசீலிக்கப்படும் என்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு நேற்று திங்கட்கிழமை நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளார்.

சொத்துக்கள் மற்றும் ஆதனங்கள் தொடர்பிலான இலஞ்ச வழக்கு காரணமாக அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெறுவதற்குத் தனது தரப்பை சேர்ந்த சஜின் வாஸ் குணவர்தன, வெளிநாட்டுக்குச் செல்லவேண்டியிருப்பதால், அவருக்கு அனுமதியளிக்குமாறு அவரது சட்டத்தரணி, நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.
இதனையடுத்தே இந்த நகர்த்தல் பத்திரத்தை இன்று பரிசீலிப்பதற்கு, வழக்கின் மனுதாரரை ஆஜராகுமாறு நீதவான் நேற்று நோட்டீஸ் அனுப்பிவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X