2025 மே 19, திங்கட்கிழமை

வெள்ளவத்தையில் தீ

Gavitha   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச. விமலச்சந்திரன்

வெள்ளவத்தை காலி வீதியில், விவேகானந்தா வீதிக்கும் 42ஆம் ஒழுங்கைக்குமிடையில் காணப்படும் இத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்யும் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காலை 10 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீயானது, தீயணைப்புப் படை வீரர்களின் கடுமையான போராட்டத்துக்குப் பின்னர், முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

விபத்துத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தீயணைப்புப் படை வீரர்கள், விபத்துக்கான காரணத்தை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை எனவும், மின்னொழுக்குக் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்ததோடு, கவனயீனம் காரணமாகவே தீ அதிகமாகப் பரவியதாகவும் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X