Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 29 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தினால் விவசாயிகளின் நலன் கருதி புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள உரமானியத்துக்குப் பதிலீடாக காசோலை வழங்கும் வேலைத்திட்டத்துக்கு விவசாயிகள் தொடர்பான தரவு சேகரிக்கும் நிகழ்வு, நாடளாவிய ரீதியிலுள்ள கமநல மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விவசாயிகள் தமது நெற் செய்கை தொடர்பான சகல விவரங்களையும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் தமது பிரதேசத்திலுள்ள கமநல மத்திய நிலையங்களில் பதிவு செய்ய வேண்டுமென சகல கலநல உத்தியோகத்தர்களுக்கும் கடிதம் மூலமாக விவசாய அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
விவசாய நடவடிக்கை தொடர்பான சரியான தகவல்களை வழங்காத விவசாயிகளுக்கு மானிய அடிப்படையிலான உரமானியத்துக்கான காசோலை வழங்கப்படுவதில் சிரமம் ஏற்படும் எனவும் விவசாயிகள் தொடர்பான தகவல்கள் கணினி மயப்படுத்தப்படவுள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025