R.Maheshwary / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்ற விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பிணை மனு இன்று (9) நிராகரிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா இலக்கம் 1 மேல்நீதிமன்ற நீதிபதி; நிமல் ரணவீரவால் இந்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
போலி சாட்சிகளை உருவாக்கி, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய குற்றசாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்குமாறு கோரி, ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக பிரதி சொலிஸிட்டர் நாயகம் ஜெனரல் ஷனில் குலரத்னவால் குறித்த பிணை மனுவுக்கு எதிர்ப்பு முன்வைக்கப்பட்டதுடன்,இருதரப்பு காரணங்களையும் கவனத்தில் எடுத்த மேல்நீதிமன்ற நீதிபதி பிணை மனுவை நிராகரித்துள்ளார்.
30 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago
8 hours ago