Janu / 2025 ஜூலை 22 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 18 கோடியே 10 இலட்சம் பெறுமதியுடைய “ஹஷிஷ்” போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் "கிரீன் சேனல்" வழியாக வெளியேற முயன்ற வெளிநாட்டு பெண் பயணி ஒருவர் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கனேடிய நாட்டைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர், இந்த போதைப்பொருள் தொகையுடன் கனடாவின் மொண்ட்ரியலில் இருந்து கட்டாரின் தோஹா நகருக்கு வந்து அங்கிருந்து இலங்கை வந்துள்ளார்.
அவரின் பயணப் பைக்குள் இருந்து 18 கிலோ 123 கிராம் “ஹஷிஷ்” போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
டீ.கே.ஜி கபில

30 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago