Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 24 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
தற்போதுள்ள ஆட்சி முறைமை நீடிக்குமாயின், இலங்கை காணாமல் போய் விடும் என்று தெரிவித்த பிவிதுறு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில, இலங்கையின் பெயரை மாத்திரமே நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு மாத்திரமே, ஜனாதிபதி, நாட்டை ஆட்சி செய்கின்றார் என்றும் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்றும் கூறினார்.
பிவிதுறு ஹெல உறுமயவின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
“வரட்சியினால் மக்கள் வாடியமைக்கு, அரசாங்கமே காரணம். நாட்டில் வரட்சி நிலவும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம், கடந்த வருடமே அறிவித்திருந்தது. ஆனால், அரசாங்கம் அதனைக் கண்டு கொள்ளவில்லை. நாட்டுக்குள் வரட்சி வந்த பின்னரே, தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டன. சாதாரண ஒரு வரட்சியிலிருந்தே மக்களை காக்கத் தெரியாத இந்த அரசாங்கம், மீண்டும் தனது கையாளாகாத தனத்தை நிரூபித்து விட்டது” என்று அவர் கூறினார்.
“வரட்சி ஏற்பட்டமையால், நீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இந்நிலைமையை சமாளிக்க, ஏற்கெனவே, திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், திக்குமுக்காடியிருக்கத் தேவையில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மக்களை பயமுறுத்துவதற்காக நாம் கருத்துக்களை முன்வைக்கவில்லை. எமது கருத்துக்களுக்கு மறுப்பு வெளியிடுவோர், அதன் உண்மையை வெகு விரைவில் அறிந்துக்கொள்வர். இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியையும் பிரதமரையும் தீர்மானிப்பது, இந்நாட்டு மக்கள் அல்ல. மாறாக சர்வதேச தலைவர்களே ஆவர்.
இந்நாட்டின் ஆட்சியை தீர்மானிப்பதும் ஆட்சியை கவிழ்ப்பதும், ஜனாதிபதியினதும் சபாநாயகரினதும் கைகளில் இல்லை. அதேபோல், உலக நாடுகளில் பலமிக்க ஜனாதிபதியை கொண்ட நாடு என்றால், அது இலங்கை தான் என்று சர்வதேசம் கூறுகிறது. இது முற்றிலும் பொய்யான கருத்தாகும். இந்த நாட்டின் ஜனாதிபதியோ பிரதமரோ பலம் பொருந்தியவர்கள் அல்லர். நாடாளுமன்றத்தில் எவரொருவர் பெரும்பான்மை பலம்பெற்றவரோ, அவரே நாட்டின் பலம் பொருந்தியவராவார்.இதுவே இந்நாட்டின் தற்போதைய நிலைமையாகும்.” என்று அவர் மேலும் கூறினார்.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago