Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 09 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்பிரமணியம்
“இரண்டாம் வருடத்தை பூர்த்தியடையச் செய்து விட்டு, மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர், மைத்திரிபால சிறிசேனவின் நாட்டுக்கான திட்டங்கள் அனைத்தையும் எண்ணி நான் பெருமையடைகின்றேன்” என்று, இந்தியாவின் ஆந்திர மாநில முதலமைச்சர் என். சந்திரபாகபு நாயுடு தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று (08) இடம்பெற்ற நிகழ்வில், சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இலங்கைக்காக, நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவரால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கை மக்களுக்கு, அவரால் மேற்கொள்ளப்படும் அத்தனை பணிகளுக்கும் நன்றி கூறிக்கொள்ளவும் விரும்புகின்றேன்.
இலங்கை, தற்போது அபிவிருத்தியை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கின்றது என்பதை நாம் உணர்கின்றோம். இதில் என்ன அதிசயம் என்றால், உலகிலுள்ள அனைத்து ஜனாதிபதிகளும் மிகப்பெரிய வீடுகளில் வசிக்கின்றனர். ஆனால், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மிகவும் சிறியதொரு வீட்டில், சாதாரண மனிதனாக வாழ்ந்து வருகிறார். இது மிகவும் அரிய நிகழ்வாகும்” என்று அவர் இதன்போது கூறினார்.
“இந்த 2017ஆம் ஆண்டு, வறுமை ஒழிப்பு ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் நல்லதொரு விடயமாகும். அது மாத்திரமல்லாது, சுகாதாரத்துக்கு, இலங்கை முன்னுரிமை அளித்து வருகிறது. இது வரவேற்கத்தக்க விடயமாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியும் இணைந்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கின்றமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று அவர் மேலும் கூறினார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago