2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘இவ்வாரம் தீர்க்கமானது’

Princiya Dixci   / 2017 ஜனவரி 22 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மக்களுக்கு நன்மைபயக்கும் வகையிலான தீர்மானங்கள் சிலவற்றை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த வாரம் (இவ்வாரம்) அறிவிப்பார்” என்று, சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  

களுத்துறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இரத்தப் பரிசோதனை மற்றும் ஏனைய பரிசோதனைகளை தனியார் பிரிவின் ஊடாக செய்யமுடியாது என, ஜனவரி 1ஆம் திகதி முதல் தடையை விதித்தேன். அது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மட்டுமல்ல, நாடளாவிய ரீதியில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் அமுல்படுத்தப்படும்” என்றார்.

  “இரத்தப் பரிசோதனைகள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் கடந்த சில தினங்களில் மட்டும் 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்த தீர்மானத்துக்கு எதிராக, நாசகார வேலையைச் செய்வதற்கு சிலர் முயன்றனர். அது ஏன், வியாபார மாஃபியா என்பதனாலாகும். அந்த வியாபார மாஃபியாவுக்கு நான் ஒரு போதும் அஞ்சமாட்டேன்” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .