2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘உள்ளூராட்சித் தேர்தலை எப்படி நடத்தினாலும் நல்லாட்சிக்குத் தோல்வி’

Princiya Dixci   / 2017 ஜனவரி 10 , மு.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனனி ஞானசேகரன் 

“எந்த முறைமையில் தேர்தல்களை நடத்தினாலும், நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கம், எதிர்வரும் தேர்தலில் தோல்வியைத் தழுவும் என்பது தெளிவாக புலப்படுகிறது” என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. அத்தோடு, தனது தோல்வியை முன்கூட்டியே அறிந்துகொண்டதாலேயே இந்த அரசாங்கம், தேர்தலை காலங்கடத்தி வருகின்றது எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. 

உள்ளுராட்சி மன்றத் தேர்தலைக் காலந்தாழ்த்தி வரும் அரசாங்கத்தின் செயற்பாடு மற்றும் எல்லை மீள்நிர்ணயக் குழுவின் அறிக்கையினை அமைச்சர் ஏற்றுக்கொள்ளாத விடயம் தொடர்பில், முறையிடுவதற்காக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேற்றுச் சென்றிருந்தது. இதன் போது ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே, கட்சியின் தலைவர் ஜி.எல். பீரிஸ், மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .