2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

119க்கு அழைப்பை ஏற்படுத்தலாம்

Kanagaraj   / 2017 ஜனவரி 07 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமையன்று அதிகாலை 4 மணிமுதல் காலை 6 மணிவரையிலான 2 மணிநேரத்துக்கு, 119 தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்த வேண்டாமென பொலிஸ் தலைமை அலுவலகம்  கடந்த 5ஆம் திகதியன்று அறிவித்திருந்தது.

பொலிஸ் அவசர மத்திய நிலையத்தின் குறுகிய இலக்கமான 119 தொலைபேசி வலையமைப்பில் அவ்வப்போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் வகையில் அவ்வலையமைப்பில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அறிவித்திருந்தது.

எனினும், ஸ்ரீ லங்கா டெலிக்கொம் நிறுவனத்துக்கு இயலாததன் காரணமாக, இந்தத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் தலைமை அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .