2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'2020க்கு முன்னர் நல்லாட்சியைக் கவிழ்ப்போம்'

Gavitha   / 2017 ஜனவரி 23 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

“2020ஆம் ஆண்டுக்கு முன்னர், சரியான வாய்ப்பொன்று கிடைக்குமாயின், தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குத் தயாராக உள்ளோம் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, நேற்றுத் தெரிவித்தார்.  

மஹரகமையில், நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஊக்குவிப்புச் சங்கத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு, பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, நீதித்துறை ஆகியன  தண்டனை வழங்காவிடில், மக்களே தண்டனையை வழங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகங்களிலிருந்து மோசடிகள் துடைத்தெரியப்படல் வேண்டும். இது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் இடம்பெறவுள்ள தேர்தலுக்கு முன்னர் செய்யப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும், அதற்கு முன்னரும் இதைச் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

இந்த ஆட்சி, விரைவில் செல்வாக்கற்றுப் போகவுள்ளது. இது, மைத்திரிக்கோ ரணிலுக்கோ உள்ள பிரச்சினை கிடையாது. நாட்டின் சமூக முறைமை கீழிறங்கிப் போவதை, இது பிரதிபலிக்கின்றது. இது, இலங்கை அரசியலின் விதிமுறையாகும். மக்கள், இந்த நிலைமைக்கு முகங்கொடுத்தேயாக வேண்டும்” என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .