2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'சீனா இப்ப நல்லமா?'

Kanagaraj   / 2016 ஏப்ரல் 04 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், சீனாவுக்கு நாளை புதன்கிழமை விஜயம்செய்யவிருக்கின்ற நிலையில், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

அந்த டுவீட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர்,ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு முதன்முறையாக 6ஆம் திகதி புதன்கிழமையன்று விஜயம் செய்யவிருக்கின்றார்.

கடந்த அரசாங்கத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்பை விமர்சனத்துக்கு உட்படுத்திய புதிய அரசாங்கம், சீன அரசாங்கத்துடனான தற்போதையை தொடர்பை அனுமதிக்கின்றதா என்று கேட்டுள்ளார்.

அதேபோல, சீனா தொடர்பிலான இலங்கையின் கொள்கை என்னவென்றும் அவர் கேட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .