2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘சீனாவுக்கு காணியில்லை’

Gavitha   / 2017 ஜனவரி 03 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.பி.மதன் 

எல்லோரிடமும் தவறாகப் பிரசாரப்படுத்துவதுபோல், சீன அரசாங்கத்துக்கு, ஹம்பாந்தோட்டையைத் தாரைவார்க்கவில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

புத்தாண்டின் முதலாவது பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, அலரிமாளிகையில், நேற்று இடம்பெற்ற போதே, பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், “ஹம்பாந்தோட்டையில், 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை சீனாவுக்கு தாரைவார்த்துள்ளதாக ஒருசிலர், பொதுமக்களைக் குழப்பி வருகின்றனர். ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில், 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தெரிவுசெய்து தரும்படி, அதிகாரிகளிடம் நாங்கள் கோரியிருக்கிறோம். அவர்கள் தெரிவு செய்யும் இடங்களில், பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.   

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில், சீனா மாத்திரமன்றி ஏனைய நாட்டினரும் முதலீடு செய்ய முடியும். இதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. எதிர்வரும் 11ஆம் திகதியளவில், இவ்வொப்பந்தங்கள் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.  

மேற்படி அபிவிருத்தித் திட்டங்களில், பாரிய ஹோட்டல்கள், களியாட்ட விடுதிகள் இடம்பெறாதெனவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அபிவிருத்திகள் மாத்திரமே இடம்பெறுமெனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,மேலும் தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .