2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘தவறான கருத்தை மஹிந்த பரப்புகிறார்’

Princiya Dixci   / 2017 ஜனவரி 31 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று, தீர்வினை வழங்குவதற்குத் தயாராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, புதிய அரசியலமைப்பின் ஊடாக, நாட்டைப் பிரிக்கப் போவதாக தவறான கருத்தை பரப்பிவருகின்றார் என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார் 

“மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில், கடந்த காலங்களில் முழு நாளும் பேசப்பட்டது. குற்றச் செயல்கள், படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கலந்துரையாடுவார்கள்.

எனினும், தற்போது 15 நிமிடங்களே ஒதுக்குகிறார்கள். இதற்கு காரணம் நல்லாட்சியாகும். என்றும் அவர் குறிப்பிட்டார். 

கண்டியில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,  

 “புதிய அரசியலமைப்புக்காக ஒரு சரத்தேனும் எழுதப்படவில்லை, எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டை பிரிக்கப்போவதாக கூறுகின்றார். இனவாதத்தை தூண்டிவிடுவதற்கே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார். இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்த ஒருவர், கொஞ்சம் அமைதியாக இருப்பதைவிடுத்து தேவையற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். 

13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வினை வழங்க வேண்டுமென அவரே முதலில் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜாவுரிமையை, இரண்டு தேர்தல்களிலும் மக்கள் இல்லாமற் செய்துள்ளார்கள். அதனைவிடவும் செய்வதற்கு ஒன்றுமில்லை.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து நல்லாட்சியை கொண்டுநடத்துவதை, பொறுத்துக்கொள்ளாமை காரணமாவே, இவ்வாறான பொய்யுரைகளை பரப்பிவருகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X